இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவரின் அனைத்து வகையான விசாக்களும் ஜுன் 11ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது கடவுச்சீட்டுக்களில் விசா நீடிப்புக்கான முத்திரையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே பதிவு செய்து குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்குச் செல்லலாம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முன் கூட்டிய பதிவுகளை இந்த இணைப்பில் செய்து கொள்ளலாம்.
இதேவேளை, மார்ச் 7 முதல் ஜுன் 11 வரையான காலப்பகுதியில் காலாவதியான விசாக்களுக்கு மேதிக அபராதம் எதுவும் அறவிடப்பட மாட்டாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment