உலகளவில் மூன்றிலொரு பங்கு கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர் - sonakar.com

Post Top Ad

Friday, 1 May 2020

உலகளவில் மூன்றிலொரு பங்கு கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்



உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மூன்றிலொரு பங்கு சிகிச்சைகள் ஊடாக அதிலிருந்து மீண்டுள்ளனர்.



இச்செய்தி பிரசுரிக்கப்படும் நேரத்தில் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,308,542 என பதிவாகியுள்ள அதேவேளை அதில் 1,042,921 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை வெளியிடப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்துள்ள அதேவேளை 154 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை உலகளாவிய மரணங்கள் 234,112 என பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment