இறந்தவருக்கு கொரோனா இல்லையா? ACMOAவுக்கு மரணத்தில் சந்தேகம்! - sonakar.com

Post Top Ad

Friday, 1 May 2020

இறந்தவருக்கு கொரோனா இல்லையா? ACMOAவுக்கு மரணத்தில் சந்தேகம்!

https://www.photojoiner.net/image/f1DLrBPE

ஏப்ரல் 27ம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 80 வயது நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலம் உறவினர்களிடம் சாதாரணமாகவே கையளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அகில இலங்கை வைத்திய உத்தியோகத்தர் சங்கம் (ACMOA) கேள்வியெழுப்பியுள்ளது.



குறித்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு, அவரோடு வைத்தியசாலைக்குச் சென்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இறந்த பின் அவருக்கு கொரோனா இல்லையென சொல்வது எப்படி என குறித்த சங்கம் கேள்வியெழுப்பியுள்ளது.

இந்நிலையில், முதலில் தமது வைத்தியசாலையில் பரிசோதிக்கப்பட்ட போது குறித்த நபருக்கு கொரோனா இருப்பதாக முடிவெடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐ.டி.எச்சில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றில்லையென முடிவாகியிருந்ததாக ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலை விளக்கமளித்துள்ளது. 

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 7 என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment