கொரோனா வைரஸில் இருந்து ஒவ்வொருவரையும் பாதுகாத்துக் கொள்ள பல்வேறுபட்ட நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையில் நாட்டின் சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களையும் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஜம்இய்யா ஆகியவை ஏலவே வழங்கியிருக்கின்ற வழிகாட்டல்களையும் பேணாமல் நேற்று (22.05.2020 / 28.09.1441) நடைபெற்ற இந்நிகழ்வை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது.
இச்சம்பவத்தில் மரணித்தவர்களுக்கு உயரிய சுவனம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதுடன் காயமடைந்தவர்கள் அவசரமாக குணமடையவும் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது. நிவாரண உதவிகளை முறையாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய சட்டங்களைப் பேணி முன்னெடுக்கும் படி ஜம்இய்யா வழிகாட்டியிருக்கின்ற நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதானது கவலையையும் மனவேதனையையும் தருகின்றது.
நெருக்கடியான இச்சந்தர்ப்பத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும், இவ்வாறான உதவிகளை மேற்கொள்ளும் போதும் நிவாரண பணிகளை முன்னெடுக்கும் போதும் நாட்டின் சட்டங்களையும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
எனவே, இவ்வாறான நிவாரணப் பணிகளில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டல்களை பூரணமாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றி நடக்குமாறு ஜம்இய்யா மீண்டும் அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment