பொது மக்களுக்கு கல்குடா ஜம்இய்யதுல் உலமா முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியே குறித்த அறிவிப்பை உலமா சபை வெளியிட்டுள்ளது.
ஜம்இய்யதுல் உலமா வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளதாவது,
சகோதர சமூகங்களைப் போலவே இம்முறை முஸ்லிம்கள் விமர்சையான பெருநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, நாட்டையும நம்மையும் பாதுகாப்போம் என்றும், புனித ரமழான் மாதத்தின் மீதமிருக்கும் நாட்களில் இரவு வணக்கம், அல் குர்ஆன் பாராயணம், தௌபா, இஸ்திஃபார் போன்ற வணக்கங்களில் வீடுகளில் இருந்தே அதிகமதிம் ஈடுவடுவதோடு, தான தர்மங்களிலும் ஈடுபடுங்கள்.
- தேவையுடையோருக்கு இந் நாட்களில் அதிகம் உதவுங்கள்.
- எந்தத் தேவைக்காகவும் எந்த இடத்திலும் கூட்டம் சேராது சமூக இடைவெளியை அவசியமாக கடைப்பிடியுங்கள்.
- வெளியில் செல்லும் போது முகக்கவசம் கட்டாயமாக அணிந்துகொள்ளுங்கள்.
- கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
- எந்தக் காரணத்திற்காகவும் சிறுவர்களும், பெண்களும் உள்ளூர், வெளியூர் புடைவைக் கடைகளுக்கோ ஏனைய வியாபார நிலையங்களுக்கோ அறவே செல்ல வேண்டாம் என உலமா சபை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
- இதனால் ஏற்படும் பாரதூரமான பின்விளைவுகள் முழுச் சமூகத்தையும் பாதிக்கக்கூடியவை என்பதை நினைவூட்டுகிறோம்.
- ஆண்கள் இது விடயத்தில் பொறுப்புடையவர்களாகும். முஸ்லிம் இளைஞர்கள் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் உலமா சபை வலியுறுத்துகிறது.
- பெருநாள் தொழுகை முதலான சகல பெருநாள் நிகழ்வுகளையும் வீட்டோடு மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
உரிய சுகாதார ஒழுங்களைக் கடைப்பிடிப்பதன் ஊடாக ஊரைத் தனிமைப்படுத்துவதிலிருந்தும் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்தும் நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment