இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக உயர்ந்துள்ளது. மாலை 6.45 வரையான தகவலின் படி இன்றைய தினம் இதுவரை 96 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 88 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களாவர்.
இப்பின்னணியில் 556 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் அதேவேளை 712 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment