இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 925 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 445 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தொடர்ந்தும் 471 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
எனினும், இறுதியாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண்ணின் கொரோனா பரிசோதனையில் தவறு நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment