890 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட செயற்கைக் கடற்பரையின் பகுதி நீரில் கரைந்துள்ளமை குறித்து சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, மக்கள் பணம் வீணாகக் கரைந்து போயுள்ளதாக விசனம் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இது குறித்து பதிலளித்துள்ள கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், இந்த 'இழப்பு' எதிர்பார்க்கப்பட்டது என தெரிவிக்கிறது.
களுத்துறை, ரத்மலான மற்றும் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதிகளில் இவ்வாறு 890 மில்லியன் ரூபா செலவில் செயற்கைக் கரையோரப் பகுதி உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், முறையான திட்டமிடல் இல்லாததால் மக்கள் பணம் விரயமாகியுள்ளதாக ஹர்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment