இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் இதுவரை 20 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 213 பேர் குணமடைந்துள்ளதுடன் ஒன்பது பேர் உயிரழந்துள்ளதாகவும் 549 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட தொற்றாளர்களுள் கடற்படையினரே அதிகளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment