கொரோனா சூழ்நிலையில் அரசு அறிவித்திருந்த 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை 74 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது அரசாங்கம்.
நாட்டின் பல இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவு கிடைக்கவில்லையென கிராம அதிகாரிகள், பிரதேச செயலகங்களில் தினசரி குழப்பங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மே மாதமும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment