கடமைக்குத் திரும்பும் பொலிசாருக்கு 7 நாள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 May 2020

கடமைக்குத் திரும்பும் பொலிசாருக்கு 7 நாள் தனிமைப்படுத்தல்


கொரோனா சூழ்நிலையில் பொலிசார் உட்பட அனைத்து பாதுகாப்பு படையினரதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. 

எனினும், பொலிசாருக்கு வழங்கப்படும் கட்டாய ஒரு நாள் ஓய்வைப் பயன்படுத்தி வீடுகளுக்குச் சென்று திரும்புவோரை 7 நாட்கள் தனிமைப்படுத்தியே கடமையில் இணைத்துக் கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் அறிவுரைக்கேற்ப, முன்னர் இரண்டு தினங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அது ஒரு வாரமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment