இன்றைய தினம் இதுவரை 09 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 674 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஐந்து கடற்படையினர் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இதுவரை 157 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜாஎல - சுதுவெல்ல பகுதியில் முன்னரங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடற்படையினர், அங்கு கொரோனா தொற்றுக்குள்ளான நபரோடு நெருங்கிப் பழகி, தனிமைப்படுத்தலைத் தவிர்த்து உலவித்திரிந்தவர்களை தேடிப் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றைப் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment