இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1613 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் நள்ளிரவு வரையான காலப்பகுதியில் 55 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோரின் தொகை 822 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 781 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment