வெசக் தினத்துக்கு முன்பாக இம்மாதத்துக்கான 5000 ரூபா கொடுப்பனவை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா சூழ்நிலையில் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவை மே மாதத்திற்கும் வழங்குமாறு ஜனாதிபதி நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்த நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் இன்னும் கிடைக்கவில்லையென பெருமளவு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment