இலங்கையில் கொரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருப்பதாக தெரிவிக்கிறார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
பெரும்பாலான தொற்றாளர்கள் கடற்படையினராக இருக்கின்ற நிலையில் பொது மக்கள் மத்தியில் கொரோனா தொற்று இல்லையென்றே அரசாங்கம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்துள இராணுவ தளபதி 500 பேரளவிலேயே (534) சிகிச்சை பெற்று வருகிறார்கள், தற்சமய் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானத்துடன் நடந்து கொண்டால் சூழ்நிலையை வெற்றி கொள்ள முடியும் என விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் கொரோனா அபாயம் நீங்கி விட்டதாக அவசர முடிவு எடுக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment