நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 35 பேரும் கடற்படையினரே என விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில் வெலிசர முகாமில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மத்தியில் கொரோனா தொற்று இல்லையென்றே தொடர்ந்தும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்து வருகின்ற அதேவேளை, கடற்படையினர் மத்தியில் ஒருவருக்கொருவர் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஜாஎல சுதுவெல்ல பகுதியில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்தவர்களைக் கைது செய்ய கடற்படையினர் களமிறங்கியிருந்த நிலையில் அதில் ஒருவர் தொற்றுக்குள்ளாகி, இன்றளவில் 500க்கும் மேற்பட்ட கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1027 ஆகும்.
No comments:
Post a Comment