எதிர்வரும் ஞாயிறு 31ம் திகதி மற்றும் ஜுன் மாதம் 4ம், 5ம் திகதிகளில் (மாத்திரம்) நாடளாவிய ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய நாட்களில், அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடக பிரிவு விளக்கமளித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment