230 டச்சுப் பிரஜைகளுடன் மத்தளயில் விமானம் தரையிறக்கம் - sonakar.com

Post Top Ad

Sunday, 3 May 2020

230 டச்சுப் பிரஜைகளுடன் மத்தளயில் விமானம் தரையிறக்கம்



நெதர்லாந்து நாட்டவர் 230 பேருடன் விசேட விமானம் ஒன்று இன்று மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல் ஒன்றின் ஊழியர்களே இவ்வாறு மத்தள விமான நிலையம் வந்தடைந்து, கப்பலை சென்றடைந்துள்ளனர். இதேவேளை, தற்போது கப்பலில் பணிபுரியும் 53 பேர் மீண்டும் இன்றிரவு 8.30 அளவில் புறப்படும் விமானத்தில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனிதாபிமான அடிப்படையில் இத்தரையிறக்கம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment