அரிசி மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 225 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
225 கோடி ரூபா சந்தைப் பெறுமதியுள்ள குறித்த தொகை வெலிசர பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகவும் சம்பவத்தோடு தொடர்புடைய நான்கு நபர்களைக் கைது செய்துள்ளதுடன் இரு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் தொடர்ச்சியாக பாரிய அளவிலான போதைப் பொருள் கைப்பற்ப்படுகின்ற போதிலும் அவை திரும்பவும் சந்தைக்கே சென்று விடுவதாக கடந்த வருடம் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment