தற்போதைய நாட்டின் சூழ்நிலையில் முன்னர் அறிவித்தபடி ஜுன் 20ம் திகதி தேர்தலை நடாத்த முடியாது என நீதிமன்றில் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
தேர்தல் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் கடந்த மூன்று தினங்களாக பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஊடாக தேர்தல் ஆணைக்குழு இதனை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
ஏழு அடிப்படை உரிமை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த அதேவேளை, மேலும் 15 பேர் இவ்வழக்கின் மனுதாரர்களாகத் தம்மை இடையில் இணைத்துக்கொண்டுள்ள நிலையில் தற்போது நீதிமன்றுக்கு இவ்வாறு தகவல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment