சஹ்ரானின் 'உரை' கேட்ட 16 சிறுவர்களிடம் வாக்குமூலம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 May 2020

சஹ்ரானின் 'உரை' கேட்ட 16 சிறுவர்களிடம் வாக்குமூலம்


ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் உரை நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படும் 16 சிறுவர்களிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இருவர் கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு நேரடியாக தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ள நிலையில் பெற்றோரும் தமது தரப்பு விளக்கத்தை வழங்க அனுமதி கோரியுள்ளனர்.

8 மற்றும் 14 வயதுடைய இருவறே இவ்வாறு நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ள அதேவேளை இதற்கு முன்னர் 14 சிறுவர்களிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளமையும் அண்மையில் மூன்று சிறுவர்கள் சி.ஐ.டியினரால் சட்டத்துக்குப் புறம்பாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ள சர்ச்சையின் பின்னணியில் நீதிமன்றுக்கு நேரடி வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment