கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 151 கடற்படையினர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 925 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் பெரும்பாலானோர் கடற்படையினர் ஆவர். ஜாஎல பகுதியில் தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்தோரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடற்படையினர் மத்தியில் வெகுவாக கொரோனா தாக்கம் பரவியுள்ளது.
இந்நிலையில், தற்போர் 151 பேர் மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment