இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1500ஐத் தாண்டியுள்ளது.
இன்றைய தினம், இதுவரை வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் 32 பேர் மற்றும் 02 கடற்படையினர் உள்ளடங்கலாக 34 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை தற்சமயம் 1503 ஆக உயர்ந்துள்ளது.
இப்பின்னணியில் தொடர்ந்தும் 748 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 745 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை உத்தியோகபூர்வ ரீதியாக 10 பேரது மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment