நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 16 பேர் கடற்படையினர் என விளக்கமளித்துள்ளார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.
நேற்றைய தினம் 16 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அதில் 13 பேர் கடற்படையினர் எனவும் ஏனைய மூவரும் அவர்களோடு நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் தற்போது பொது மக்கள் மத்தியில் கொரோனா தொற்றில்லையென தெரிவிக்கப்படுகின்றமையும் தொடர்ந்தும் 533 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment