இலங்கையில் ஞாயிறு இரவு 11.55 வரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1141 ஆக உயர்ந்துள்ளது.
இதில், ஆகக்குறைந்தது 47 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்கள் என இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானப்படை முகாம் தவிர நாட்டுக்குள் வேறு கொரோனா பரவல் இல்லையென அரசு தெரிவித்து வரும் நிலையில் தற்போது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுவதும், இவர்களிடம் பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையிலேயே தொற்று கண்டறியப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment