கொழும்பு, புத்தளம், களத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான ஊரடங்கு மே மாதம் 11ம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் திகதி முதல் வழமை வாழ்வுக்கான நடவடிககைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் திங்கள் 4ம் திகதி காலை தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் இரவு எட்டு மணிக்கு அமுலுக்கு வருவதோடு செவ்வாய் 5ம் திகதியும் இதே போன்று தொடரும் எனவும் 6ம் திகதி புதன் கிழமை முதல் 11ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமுலுக்கு வரும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மே 11ம் திகதி முதல் நாடு வழமைக்குத் திருப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment