ஜாஎல சுதுவெல்லயில் கொரோனா தொற்றுக்குள்ளான நபரோடு தொடர்பிலிருந்து, தனிமைப்படுத்தலைத் தவிர்த்து வந்த நபர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து நேற்று வரை தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான கடற்படை வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பின்னணியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 12 பேரின் 10 பேர் கடற்படையினர் எனவும் ஏனைய இருவரும் கடற்படையினரோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 847 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 260 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 578 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment