வட மேற்கு இங்கிலாந்தின், ப்ளக்பேர்ன் பகுதியில் இயங்கும் மஸ்ஜிதுல் மூமினீனைச் சார்ந்த இரு இமாம்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வபாத்தாகியுள்ளனர். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
மௌலானா அப்துல் ரசாக் மற்றும் மௌலானா அப்துல் மஜீத் ஆகியோரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளனர்.
1984ம் ஆண்டு நிறுவப்பட்ட குறித்த பள்ளிவாசல் வடமேற்கு இங்கிலாந்தில் பிரபலமானதும் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் மார்க்க மற்றும் சமூக நல விடயங்களின் முக்கிய மையமாகவும் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment