சம்மாந்துறையில் T56 துப்பாக்கி மீட்பு ; ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 April 2020

சம்மாந்துறையில் T56 துப்பாக்கி மீட்பு ; ஒருவர் கைது!

https://www.photojoiner.net/image/FZmE0pyi

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார்.



சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி சூடு இடம்பெற்று 24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை (21)  26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய  ரவைக்கூட்டையும் மீட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேக நபர் தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை நாளை புதன்கிழமை(22)  சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில்  ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.

-பாறுக் ஷிஹான்


No comments:

Post a Comment