இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் கொழும்பு மாநகர சபையைச் சார்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவரும் உள்ளடக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.
பி.சி.ஆர் பரிசோனையின் போது குறித்த சுகாதார ஆய்வாளருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ள மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி, ஊழியர்களின் பாதுகாப்பு தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
குறித்த ஆய்வாளரின் குடும்பதவர் மற்றும் சக ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment