அங்கொட, ஐ.டி.எச் வைத்தியசாலையில் 120 தொற்றாளர்களை வைத்துப் பராமரிப்பதற்கான வசதிகளே இருக்கின்ற போதிலும் தற்போது அங்கு 150 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு இனி இடமில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குணமடைந்த நிலையை எட்டியுள்ள சுமார் 25 பேரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தேசிய தொற்று நோயியல் நிலையத்தின் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தற்சமயம் இலங்கையில் 630 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அதில் 487 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment