கடந்த 22ம் திகதி வெலிசர கடற்படை முகாமிலிருந்து பதுளை பகுதிகளுக்கு விடுமுறையில் சென்ற 31 கடற்படை வீரர்களுள் மூவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெலிசர முகாமில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து தற்போது சுமார் 4000 சிப்பாய்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பதுளை பகுதிக்குச் சென்றோர் பசறை, பண்டாரவளை, மஹியங்கனை, பதுளை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 31 பேரையும் தனிமைப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இதுவரை 420 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையும் அதில் 109 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment