21 மாவட்டங்களில் ஊரடங்கு இன்றிரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ள நிiலியல் சமூக இடைவெளி பேணப்படாவிட்டால் கைது செய்யப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 588ஐத் தொட்டுள்ள நிலையில் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களில் இரவு வேளைகளில் மாத்திரம் ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், வெளியில் செல்லும் மக்கள் மற்றவருக்கும் தமக்குமிடையிலான ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணத் தவறுமிடத்து கைது செய்யப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment