தற்போது நாடு சென்று கொண்டிருக்கும் பாதையிலேயே தொடர்ந்தால் கொரோனாவுக்கு முன்பாக ஜனநாயகம் தொலைந்து விடும் என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றின் முழுமையான பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனைக் கலைத்து விட்டு சர்வாதிகாரப் போக்கில் அனைத்தையும் மூடி மறைத்துக் கொண்டிருப்பது ஜனநாயகத்தின் தோல்வியென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கொரோனா நிவாரணத்துக்காக வரும் நிதியின் உண்மையான நிலவரம் கூட மக்களுக்குத் தெரியாமல் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment