தமது நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பில் உண்மையான தகவல்களை வெளியிடாமல் மறைத்து உலகுக்கு பொய் சொன்னதாக குற்றஞ்சாட்டி சீன அரசுக்கு எதிராக அமெரிக்காவின் மிசூரி மாநிலம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அம்மாநிலத்தின் சட்டமா அதிபர் செவ்வாய் தினம் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்துள்ளதுடன் கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர், மற்றும் பொருளாதா இழப்புக்கு சீனா இழப்பீடு தர வேண்டும் என கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த சீனாவின் வுஹான் பிரதேசத்தில் உயிரிழந்தோர் தொகையை அண்மையில் திடீரேன 50 வீதத்தால் சீனா அதிகரித்திருந்தமையும், சீனா தொடர்ந்தும் கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை மறைத்து வருவதாக பல நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment