தனது பேஸ்புக் பக்கத்தில் முஸ்லிம்கள் மத்தியில் சிந்தனைத் தெளிவு அவசியப்படுவதை வலியுறுத்தி சிங்கள மொழியில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அதில் பாவிக்கப்பட்டிருந்த சொல்லொன்றின் அடிப்படையில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரம்சி ராசிக் என அறியப்படுபவரின் தடுப்புக் காவல் மே மாதம் 14ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட முறையில் அரங்கேற்றப்படும் இனவாதத்தினை முறியடிக்க, முஸ்லிம்கள் சிந்தனா யுத்தத்துக்குத் தயாராக வேண்டும் என வலியுறுத்தி சிங்கள மொழியில் எழுதியிருந்த நிலையில் அதை 'சிந்தனா ஜிஹாத்' என குறிப்பிட்டிருந்ததன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றிருந்தது.
எனினும், இன்றைய விசாரணையின் போது இவரின் கடந்த கால பதிவுகள் சிலவும் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் இருந்ததாக பொலிஸ் தரப்பினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ரம்சி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சுமேந்திரன் குறித்த நபர் அடிப்படைவாதத்துக்கு எதிராக கருத்தெழுதியவரே தவிர அதனை ஊக்குவித்தவர் இல்லையென நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், வேண்டுமென்றே இக்குற்றத்தைப் புரிந்தாரா என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் மே 14 வரை தடுப்புக் காவலை நீடித்துள்ளது.
- AAS (medialk.com)
- AAS (medialk.com)
No comments:
Post a Comment