கடற்படையினர் மத்தியில் வெகுவாக கொரோனா தொற்று இடம்பெற்றுள்ள நிலையில் பொலிசாரை அவதானமாகவும் இடைவெளியைப் பேணி தமது கடமைகளைச் செய்யவும் விசேட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அவசியமின்றி பொலிஸ் அதிகாரிகள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்வது, அல்லது அலுவலகங்களுக்குச் செல்வது, நெருக்கமாக பணியாற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், முப்படை மற்றும் பொலிசாரிடமும் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment