திங்கட் கிழமை காலை 5 மணியோடு தற்போது அமுலில் இருக்கும் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு முடிவுறும் நிலையில் அத்தோடு ஊரடங்கை கை விடுவதற்கு அரச தரப்பு முயற்சிப்பதாக அறியமுடிகிறது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்குச் செல்தல் மற்றும் அங்கிருந்து வெளியேறுதலை தொடர்ந்தும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள அதேவேளை ஊரடங்கை தளர்த்துவதில் ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.
ஜுன் 20ம் திகதி தேர்தலுக்குத் தேதி குறிக்கப்பட்டுள்ள அதேவேளை கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும் நேற்றைய தினம் மாத்திரம் 49 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment