கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவ ஆரம்பித்த போது முதலில் சீனர்கள் மீது பழி போடப்பட்டது, அதற்கடுத்ததாக இத்தாலி மற்றும் தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர் மீதும் அதற்கடுத்ததாக முஸ்லிம்கள் மீதும் பழி போட்டு வந்தவர்கள் தற்போது கடற்படையினரை வைது வருவதாகவும் குறிப்பிட்டுள்ள பிமல் ரத்நாயக்க எப்பேற்பட்ட சுகயீனம் உள்ள சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனாவை வென்றெடுப்பதற்கான அடிப்படைத் தேவை தேச ஒற்றுமையே எனவும் அதனைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத தெரண மற்றும் ஹிரு தொலைக்காட்சி சேவைகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகம் நிந்திக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment