மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட கொழும்பு மாநகர சபையின் 12 சுகாதார ஆய்வாளர்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தமக்கு கொரோனா தொற்றிருக்குமோ என்று சந்தேகிப்பதாகவும் அதற்கேற்ப பி.சி.ஆர் பரிசோதனையை நடாத்துமாறும் குறித்த நபர்கள் முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வாறு தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தாம் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக குறித்த குழுவினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment