இரு தடவைகள் நாட்டைக் காப்பாற்றியவராக ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை வரலாறு அறிந்து கொள்ளும் என புகழுரைத்துள்ளனர் மகா சங்கத்தினர்.
ஜனாதிபதியோடு இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள மகா சங்கத்தினர் அரசியல் யாப்புக்குப் புறம்பாக எதுவித முடிவும் அவசியமில்லையெனவும் இடர்க்காலங்களைக் கடந்து செல்ல நாடு பழகிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா சூழ்நிலை குறித்து ஜனாதிபதியின் விளக்கத்தைப் பெற்ற மகாசங்கத்தினர் நாடாளுமன்றை மீண்டும் கூட்ட வேண்டிய அவசியமில்லையென ஏகமானதாக ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment