21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும், வாரியபொல - பாதெனிய பகுதி வர்த்தகர்கள் தாமாகவே கடைகளை மூடி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் ஒரு கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டிருந்த நிலையில் மேலும் சில சந்தேக நபர்கள் உலவுவதாகவும் முழுமையான பரிசோதனைகள் நடாத்தப்படும் வரை சுய பாதுகாப்பு அவசியப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே மாதம் 5ம் திகதி வரை கடைகளைத் திறக்கப்போவதில்லையென வர்த்தகர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment