ஹொரவ்பொத்தான: கடற்படையினரின் குடும்பங்கள் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Saturday, 25 April 2020

ஹொரவ்பொத்தான: கடற்படையினரின் குடும்பங்கள் தனிமைப்படுத்தல்


வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய சுமார் 4000 சிப்பாய்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஹொரவ்பொத்தான மற்றும் கெபித்திகொல்லாவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குச் சென்ற சில கடற்படையினரின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.



ஹொரவ்பொத்தான பகுதிக்குச் சென்ற நான்கு கடற்படை வீரர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை குறித்த சிப்பாய்களுக்கு பி.சீ.ஆர் பரிசோதனை அநுராதபுர வைத்தியசாலையில் நடாத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, கெபித்திகொல்லாவ பகுதிக்குச் சென்ற 9 கடற்படை சிப்பாய்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இரு சிப்பாய்கள் பி.சீ.ஆர் பரிசோதனை நிமித்தம் அநுராதபுரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment