பேருவளை, அட்டுலுகம, யாழ்ப்பாணம், அக்குரணை, நீர்கொழும்பு மற்றும் ரத்னபுர ஆகிய இடங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக தெரிவிக்கிறார் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க.
சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் ஊடாக மேலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், சமூக பரவல் அபாயத்தை இதனூடாக தவிர்க்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.
கடற்படையினரிடம் பரிசோதனை நடாத்தப்பட்ட நிலையிலேயே எண்ணிக்கை வெகுவாக உயர்ந்திருந்த நிலையில் நேற்றைய தினம் 1400 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் தினசரி 2000 பரிசோதனைகளை நடாத்த எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பொது மக்கள் மத்தியில் போதிய பரிசோதனைகள் நடாத்தப்படாமல் கொரோனா எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுவதாக சம்பிக்க ரணவக்க அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment