தம்புல்ல பொருளாதார மையத்துக்கு முன்னால் இயங்கி வந்த இரு கடைகளுக்கு சுகாதார அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
மனிதர்களின் பாவனைக்குதவாத பொருட்களை வைத்திருந்தமை மற்றும் களஞ்சியத்தில் அளவுக்கதிமான பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தமை, சுகாதார விதிகளை மீறியமை போன்ற பல்வேறு காரணிகள் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் முடக்கப்பட்டிருந்த குறித்த பிரதேசம் அண்மையிலேயே மீளத் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment