இலங்கையில் தற்சமயம் இடம்பெற்று வரும் விடயங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும், ஆயினும் பதற்றப்பட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலி.
தற்சமயம் பல சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் சமூக மட்டத்தில் பல்வேறு பதற்றமான எண்ணப் போக்கு நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா தொற்றுக்குள்ளான மருதானை தாயின் குழந்தை இன்னும் கையளிக்கப்படாதமை சந்தேகத்துக்கு வலுவூட்டுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் நாட்டு சூழ்நிலை தொடர்பில் முஸ்லிம் குரலுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். குறித்த ஒலிப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment