வா'சேனை: ஊரடங்குக்கு மத்தியில் மரம் கடத்திய மூவர் கைது - sonakar.com

Post Top Ad

Thursday, 30 April 2020

வா'சேனை: ஊரடங்குக்கு மத்தியில் மரம் கடத்திய மூவர் கைது


வாழைச்சேனை வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலவேளையில் சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், இரண்டு வாகனமும், மரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.



குடும்பிமலை இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் குடும்பிமலை காட்டுப்பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஒன்பது அடி நீளம் மதிக்கத்தக்க எட்டு ஏழிலைப்பாலை மரங்களும், மூன்று சந்தேக நபர்கள் மற்றும் இரண்டு வாகனங்கள் என்பன வட்டார வன உத்தியோகத்தர்களின் சுற்றிவலைப்பில் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட மரங்கள், மூன்று சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் என்பவற்றை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதற்கு இணங்க ஒருவருக்கு தலா இரண்டு இலட்சம் சரீர பிணையில் விடுதலை செய்வதுடன், கடத்தப்பட்ட மரங்கள் பறிமுதல் செய்யுமாறும், ஊடரங்கு சட்டத்தினை மீறி பயன்படுத்திய இரண்டு வாகனங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் மாவட்ட / வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை வட்டார வன பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு தனது தலைமையில் வட்டார வன உத்தியோகத்தர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தனிகாசலம் மேலும் தெரிவித்தார்.

குறித்த நபர்களை தலா இரண்டு இலட்சம் சரீர பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment