வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி வந்த சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த முகாமில் அவசர சுகாதார மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
32 வயதுடைய குறித்த சிப்பாயுடன் நெருங்கிய பழகியவர்கள் மற்றும் அவர் பணியாற்றிய இடங்களை இலக்கு வைத்து இந்நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
19ம் திகதி விடுமுறையில் ஊர் சென்றிருந்ததன் பின்னணியில் பொலன்நறுவயில் அவர் வாழ்ந்த மற்றும் பயணித்த இடங்கள் உள்ளடங்கலாக 12 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment