கொரோனா: தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 22 April 2020

கொரோனா: தனியார் வைத்தியசாலைக்கு பூட்டு!


கொரோனா தொற்றாளர் ஒருவர் வந்து சென்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பன்னிபிட்டிய பகுதியில் இயங்கி வந்த தனியார் வைத்தியசாலையொன்று மூடப்பட்டுள்ளது.



அங்கு பணியாற்றி வந்த சுமார் 73 ஊழியர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ள அதேவேளை 7 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏலவே, தம்பதிவ சென்று வந்த பெண்ணால் பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பிலியந்தலயில் தொற்றுக்குள்ளானாவரால் அப்பகுதியில் சுமார் 66 பேர் என நேற்றைய தினம் புதிதாக பலர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment