கொரொனா தொற்றாளர்களுக்கான அவசர சிகிச்சையளிப்பதற்கு வரகாபொல வைத்தியசாலையில் பிரத்யேக இடத்தை ஒதுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தற்போது வெளி நோயாளர் பகுதியாக இயங்கி வரும் பழைய கட்டிடத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளை இதற்கென பிரத்யேகமாக ஒதுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் பத்ம குமார் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல இடங்களிலும் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்ற அதேவெளை கொழும்பு ஐ.டி.எச்சில் மேலதிக நோயாளர்களை பராமரிப்பதற்கு இடமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment